உரிமம் இன்றி இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விட்டால் ரூ. 10,000 அபராதம்..!

புதுச்சேரியில் உரிமம் (License) பெறாமல் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் நபர்களுக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: ”புதுச்சேரியில் பல பகுதிகளில் பொதுமக்கள் சிலர், உரிமம் எதுவும் பெறாமல் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் தனியார் சேவை வாகனங்களை வாடகைக்கு விடுவதாகப் போக்குவரத்துத் துறைக்குப் புகார்கள் வந்துள்ளன.

 

குறிப்பாக, புதுவைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மையமாக வைத்து நடத்தப்படும் இத்தகைய நடவடிக்கைகள், மோட்டார் வாகனச் சட்ட விதிகளுக்கு முரணானவை ஆகும். வாடகை வாகன அமைப்பைப் பற்றி அறியாத நபர்களும், ஓட்டுநர் உரிமம் (Driving License) இல்லாதவர்களும் இந்த வாகனங்களை இயக்கும்போது விபத்து ஏற்பட்டால், காப்பீட்டுத் தொகை (Insurance) மற்றும் அரசின் இலவச மருத்துவ சேவை ஆகியவற்றைப் பெற முடியாமல் போகும். இது விபத்தில் சிக்கும் ஓட்டுநருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மிகுந்த துன்பத்தை ஏற்படுத்தும்.

 

எனவே, இருசக்கர வாகனங்களை உரிய உரிமம் இல்லாமல் வாடகைக்கு விடுவது மோட்டார் வாகனச் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவோர் கண்டிப்பாகப் போக்குவரத்துத் துறையில் உரிமம் பெற வேண்டும். இதற்கு குறைந்தபட்சம் 5 இருசக்கர வாகனங்கள் வைத்திருக்க வேண்டும். உரிமம் பெறாமல் விதிகளை மீறுவோர் மீது மோட்டார் வாகனச் சட்டப்படி ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும்” என்றும் போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் எச்சரித்துள்ளார்.


ஐஸ்கிரீமில் கிடந்த பல்லி வால்.. ரூ.50,000 அபராதம்

ஸ்கிரீம் பிரியர்களே கொஞ்சம் உஷாரா இருங்க. குஜராத்தில் பிரபல நிறுவனத்தின் ஐஸ்கிரீமில் பல்லி வால் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் ஒருவர் தனது குழந்தைக்காக வாங்கிய ஐஸ்கிரீமில் பல்லியின் வால் இருந்துள்ளது.

 

இதனை வீடியோ பதிவு செய்து சோஷியல் மீடியாவில் அவர் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ஆய்வு செய்த அதிகாரிகள், அந்த ஐஸ்கிரீம் பார்லருக்கு சீல் வைத்து ₹50,000 அபராதம் விதித்துள்ளனர்.


தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு ரூ.2,000 அபராதம்..!

டைகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் வைப்பது தொடர்பாக வணிகர் சங்க உறுப்பினர்களுடன் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகைகள் வைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

தமிழில் பெயர் பலகைகள் வைப்பது தொடர்பான உத்திகளை வகுத்தல், தொடர்புடைய துறைகள் மற்றும் பங்குதாரர்களின் ஒத்துழைப்பை பெறுதல் போன்றவை தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சி அமைப்புகளில் தமிழில் பெயர் பலகைகள் வைக்காத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளின் படி ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

உணவகங்களில் தமிழில் பெயர் பலகைகள் வைக்கப்படாவிட்டால் தமிழ்நாடு கேட்டரிங் நிறுவனங்கள் சட்டத்தின் அடிப்படையில் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொழிலாளர் நலத்துறை ஆணையர் ராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சியின் பல்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


ஹெல்மெட் போடாமல் சென்ற நடிகர் பிரசாந்த்..ரூ.2,000 அபராதம்..!

ஹெல்மெட் அணியாமல் சென்ற நடிகர் பிரஷாந்த் தொலைக்காட்சி தொகுப்பாளியின் தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் தொகுப்பாளினியுடன் பிரசாந்த் என்ற வீடியோ வைரலான நிலையில் போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 

டி நகர் சாலையில் பேட்டி எடுத்துக் கொண்டே புல்லட்டில் இருவரும் சென்ற வீடியோ வைரலான நிலையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 


அரசு, தனியார் பேருந்துகளுக்கு தலா ரூ.10,000 அபராதம்..!

ரோடு பேருந்து நிலையத்தில் வெளியூர்களுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

 

இரண்டு அரசு பேருந்துகள் மற்றும் 6 தனியார் பேருந்துகளுக்கு ஆர் ஹாரன் தொடர்பாக தலா பத்தாயிரம் அபராதம் விதிக்க அபராதம் விதித்த அவர்கள் பேருந்துகளில் ஹாரன் மற்றும் முதலுதவி பெட்டி சரியாக உள்ளதா என்றும் ஆய்வு செய்தனர்.

 


பொது இடங்களில் கட்டிடக்கழிவுகளை கொட்டினால் ரூ.10,000 அபராதம்..!

பொது இடங்களில் கட்டிடக்கழிவுகளைக் கொட்டினால் ஒரு டன்ணுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று பெங்களூர் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

இதனிடையே சாலைகளில் பொது இடங்களில் கட்டிடக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பெங்களூரு மாநகராட்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இப்படி கழிவுகளை கொட்டினால் ஒரு டன்னுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

 


சரவணா செல்வரத்தினம் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்..!

துரை சரவணா செல்வரத்தினம் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம் விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. டெங்கு, கொசு உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியதாக மதுரை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

 

தேவையற்ற பழைய பொருட்களை சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்த காரணத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவேந்திரன் ஒர்க் ஷாப் நிறுவனத்திற்கும் பத்தாயிரம் அபராதம் விதித்தது மதுரை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

 


ரூ.5,000 கடன் வாங்க சென்ற இளைஞருக்கு ரூ.20,000 அபராதம்..!

கிருஷ்ணகிரியில் போதையில் காரை ஓட்டி சென்றதால் இருபதாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் நிகழ்ந்துள்ளது. போச்சம்பள்ளி அருகே திருப்பத்தூர் சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்துள்ளது.

 

இருந்த போதிலும் காரை தொடர்ந்து வேகமாக ஓட்டி சென்றதால் அந்த பகுதி மக்கள் காரை மடக்கி பிடித்தனர். பின்னர் காரில் இருந்தவர்களை காட்டி காவல்துறையினர் ஒப்படைத்தனர். விசாரணையில் மதுபோதையில் காரை வேகமாக ஓட்டியது தெரிய வந்தது.

 

இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து இருபதாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனார். விசாரணையில் உறவினர் ஒருவரிடம் ஐந்தாயிரம் ரூபாய் கடன் வாங்க சென்று கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.