நீட் தேர்வு, மத்திய அரசு மீது அமைச்சர் உதயநிதி விமர்சனம்..!

மிழக மாணவர்கள் மருத்துவராகவே சவாலாக உள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

பட்டுக்கோட்டையில் திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பேசியவர் நீட் தேர்வு, மத்திய அரசு மீது அமைச்சர் உதயநிதி விமர்சனம் செய்துள்ளார்.

 


மாணவர்களின் உயிரை குடிக்கும் நீட் தேர்வு?! தொடரும் தற்கொலைகளுக்கு என்னதான் தீர்வு?

க்களின் உயிரை காக்கும் டாக்டர்களுக்கான படிப்புக்கு அறிமுகம் செய்யப்பட்ட நீட் தேர்வு, அப்பாவி மாணவ மாணவியரின் உயிரை குடித்து வருகிறது.

ஞாயிறன்று நீட் தேர்வு நடைபெறும் நிலையில் அடுத்தடுத்து தமிழகத்தில் அரங்கேறியுள்ள தற்கொலைகள், பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளன. இதற்கு காரணம், அரசின் பிடிவாதமா? பெற்றோர் தரும் நிர்பந்தமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

நாடு முழுவதும் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள், நீட் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு செப். 13ம் தேதி ஞாயிறன்று நடைபெறவுள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, சேலம், நெல்லை, திருப்பூர், கோவை உள்பட 14 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறவுள்ளது.

 

கொரோனா தொற்று காரணமாக நீட் தேர்வை இந்தாண்டு தள்ளி வைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், மத்திய அரசு அதை ஏற்கவில்லை; நீட் தேர்வுக்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்துவிட்டது. எனவே, கொரோனா தொற்றுக்கு மத்தியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இம்முறை நீட் தேர்வு நடைபெறவுள்ளது.

 

அதன்படி, பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் நீட் தேர்வுக்கு, மாணவர்கள் 3 மணி நேரத்துக்கு முன்பே வர வேண்டும். காலை 11 மணி முதல் ஒருமணி நேரத்துக்கு தலா 90 மாணவர்கள் வீதம் பரிசோதிக்கப்பட்டு தேர்வு மையத்திற்குள் அனுப்பப்படுவர்கள். மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வந்த பிறகு, அங்கு தரப்படும் முகக்கவசத்தை அணிய வேண்டும்.

 

காய்ச்சல் உள்ளதா என பரிசோதிக்க உரிய ஏற்பாடும், காய்ச்சல் இருந்தால் அந்த மாணவர் தனி அறையில் தேர்வு எழுதவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் முழு கைச்சட்டை அணிந்து வரக்கூடாது என்பது உள்ளிட்ட வழக்கமான கட்டுப்பாடுகளும் அமலில் உள்ளன.

 

முதல் தற்கொலை

 

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்புக்குரல் வலுத்து வருகிறது. இதற்கு காரணம், கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக, தமிழகத்தில் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதுதான். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நீட் தேர்வால், அரியலூரை சேர்ந்த ஏழைச்சிறுமி அனிதா, தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்திற்குள்ளாக்கியது.

 

மாணவி அனிதா, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1200 மதிப்பெண்களுக்கு 1176 மதிப்பெண்கள் எடுத்திருந்தும், நீட் தேர்வில் அவருக்கு 720 மதிப்பெண்களுக்கு வெறும் 86 மதிப்பெண்களே கிடைத்தன. மருத்துவராகும் தனது கனவு தகர்ந்ததால், 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் தற்கொலை செய்துகொண்டார். தமிழகத்தில் நீட் தேர்வு தோல்வியால் நிகழ்ந்த முதல் தற்கொலை இதுவாகும்.

 

இதையடுத்து, தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று, கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. எனினும், நாடு முழுவதும் மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயம் நடைபெறும் சூழலில், தமிழகத்துக்கு மட்டும் விலக்கு தர இயலாது என்று மத்திய அரசு மறுத்துவிட்டது.


மாணவர்களின் உயிரை குடிக்கும் நீட் தேர்வு

 

இந்நிலையில் தான் தமிழகத்தில் நடப்பாண்டு நீட் தேர்வு நடக்கிறது. ஆனால், இந்தாண்டு நீட் தேர்வுக்கு முன்பாக இதுவரை மூன்று மாணவர்கள் நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பது, தமிழகத்தை அதிரச் செய்துள்ளது. கோவை சுபஸ்ரீ, அரியலூர் விக்னேஷ் மற்றும் தற்போது மதுரை மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா என, எதிர்கால கனவுகளுடன் வாழ்ந்த மூன்று பேர், தங்களது விலைமதிப்பற்ற உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

கோவை ஆர்.எஸ்.புரத்தை ரவிச்சந்திரனின் 19 வயது மகள் மாணவி சுபஸ்ரீ, கடந்த இரு ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக பயிற்சி மையத்தில் பயின்று வந்துள்ளார். இம்முறை தேர்வுக்கு தயாராகி வந்த அவர், கடும் மனஅழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதை தொடர்ந்து, அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்த மாணவர் விக்னேஷ், கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். இவரும் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தவர்தான்.


இந்த சூழலில்தான், மதுரை மாணவி ஜோதி துர்கா, பெற்றோருக்கு உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் முருகசுந்தரம். இவர் காவல்துறை எஸ்.ஐ.ஆக பணியாற்றி வருகிறார். அவரது மகள் ஜோதி துர்கா, கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியும் தேர்வாகததால் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து, தயாராகி வந்தார். எனினும், இந்த ஆண்டும் தேர்ச்சி பெறாமல் போய்விடுவோமோ என்ற பயம், அவருக்குள் வாட்டி வதைத்து வந்துள்ளது. இந்த மனஉளைச்சலில், ஜோதி துர்கா நேற்று நள்ளிரவு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

“அப்பா ப்ளீஸ் ரொம்ப அழாதீங்க”

 

தற்கொலைக்கு முன்பு தனது பெற்றோருக்கு அவர் எழுதிய கடிதத்தில், நீங்க எல்லோரும் என்மீது மிகுந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தீர்கள். என்னை மன்னித்துவிடுங்கள். ஒருவேளை எனக்கு சீட் கிடைக்காவிட்டால், நீங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் வீணாகிவிடும். அப்பா நீங்கள் இருதய நோயாளி. எனவே, சோகமா இருக்காதீர்கள். அப்பா ப்ளீஸ் ரொம்ப அழாதீங்க. டயட்டை விட்ராதீங்க. உடம்பை பார்த்துக்கோங்க.! ஸ்ரீதர் (சகோதரர்) 10ஆம் வகுப்பு போகப் போகிறான் அவனை நல்லா பார்த்துக்கோங்க. உங்களை நம்பிதான் அவன் இருக்கான். இந்த உலகில், நீங்கள்தான் சிறந்த அப்பா” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜோதி துர்காவின் கடித வரிககள்…

மேலும், ”நான் நன்றாக படித்துள்ளேன். ஆனாலும் எனக்கு பயமாக இருக்கிறது. ஒருவேளை எனக்கு மெடிக்கல் சீட் கிடைக்கவில்லை என்றால், உங்கள் எல்லாருக்கும் ஏமாற்றமாகிவிடும். நான் மிகவும் சோர்ந்துவிட்டேன், பாய்..!” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தனது மொபைல்போனில் ஆடியோ பதிவிட்டுள்ளார். மாணவி ஜோதி துர்காவின் கடித வரிகளும், ஆடியோ பதிவும் கல்நெஞ்சம் கொண்டவர்களையும் உருகச்செய்வதாக உள்ளது.

 

கட்சித் தலைவா்கள் காட்டமாக அறிக்கை!

 

மாணவி ஜோதி துர்காவின் தற்கொலை தமிழகத்தை உலுக்கிவிட்டது. இதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்பினரும், நீட் தேர்வுக்கு எதிராக கொதித்தெழ தொடங்கிவிட்டனர். திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி, பாமக நிறுவனர், வைகோ, கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து என்று பலரும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியுள்ளனர்.

 

இறந்த மாணவியின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்வதுதான் ஒரேவழி என்று பாமக நிறுவனர் ராமதாஸ், காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வைப் பொறுத்தவரை தமிழ்நாட்டையும், பிற மாநிலங்களையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது என்பது ராமதாஸ் போன்றவர்களின் வாதம். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மருத்துவப்படிப்புக்கு நுழைவுத்தேர்வுகள் இருந்தபோதும் கூட, தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வு இருந்ததில்லை.

 

எனவே, தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேறி அனுப்பியும் கூட, மத்திய அரசு தீர்மானத்தை பரிசீலனைக்காமலே திருப்பி அனுப்பி விட்டது. அரசின் நீட் தேர்வு வருகைக்கு பிறகு, மாணவர்கள் மனரீதியாக அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்; தனியார் சிறப்புப் பயிற்சி நிறுவனங்களுக்கு அதிக பணத்தை கொடுத்து பயிற்ச்சி பெறும் கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, மாணவர்களின் நலன் கருதி, நீட் தேர்வு என்ற முறையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் இருந்து குரல்கள் அதிகரிக்க தொடங்கிவிட்டன.

 

அதேநேரம், நீட் தேர்வு விஷயத்தில் பெற்றோரும் தங்களது குழந்தைகளுக்கு அளவுக்கதிகமாக நெருக்கடி தருகின்றனர் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். பல பெற்றோர்களும், “டாக்டரானால் நிறைய சம்பாதிக்கலாம்” என்று சொல்லி தங்களது குழந்தைக்கு நிர்பந்தம் தருகின்றனர்.

 

அதிக பணம் செலவழித்து பயிற்சி தருவதால், மதிப்பெண்கள் எடுத்தாக வேண்டும் என்று பெற்றோரின் எதிர்பார்ப்பு, மாணவர்களுக்கு பெரும் மனஅழுத்தத்தை உண்டாக்குகிறது. இதனால், தேர்வுக்கெனக் கடுமையாக உழைத்தும்கூட, தேர்வு நெருங்கும் நேரத்தில் பதற்றம் அதிகரித்து, தற்கொலை என்ற விபரீத முடிவை எடுத்துவிடுகிறார்கள்.

 

நிரந்தரத்தீர்வு வேண்டும்

 

இறைவன் தந்த இந்த வாழ்க்கை மிக அழகானது, அரிதானது. ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் ஓர் அர்த்தம் உள்ளது. தங்களது பாசமிகு குழந்தைகளுக்கு இயல்பாக எதில் நாட்டம் உள்ளதோ அதில் அவர்களின் திறமையை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். டாக்டருக்கும், இன்ஜினியருக்கும் படித்தால் மட்டுமே அந்தஸ்து என்ற மனோபாவத்தை பெற்றோர்கள் முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும். அத்துடன், மதிப்பெண் அல்லது தேர்ச்சி என்பது ஒரு பொருட்டல்ல; எதுவானாலும் நாங்கள் உன்னோடு இருப்போம் என்று, தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர் தன்னம்பிக்கையை ஊட்ட வேண்டும்.

 

உயிர்காக்கும் புனிதமான தொழில் மருத்துவர் தொழில். மாணவச் செல்வங்கள் மருத்துவராக ஆசைப்பட்டு, அது நிறைவேறாமல் போய் உயிரைவிடுவது, கொடுமையிலும் கொடுமை!. நீட் தேர்வுக்காக மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் போக்கையும், அதற்கான தீர்வையும் மத்திய மாநில அரசுகள் இனியேனும் ஆராய வேண்டும்; நீட் தேர்வுக்காக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளாமல் இருக்க, நிரந்தரத்தீர்வு காண வேண்டும்.


நீதிமன்றம் காட்டும் சமூகநீதிப் பாதையில் அரசு செல்ல வேண்டும்- மு.க. ஸ்டாலின்

நீட் தேர்வு விவகாரத்தில், நீதிமன்றம் காட்டும் சமூக நீதிப்பாதையில் மத்திய, மாநில அரசுகள் இனியாவது செல்ல வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

சென்னை உயர் நீதிமன்றம், நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கை விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் முன் வைத்தது. ‘நீட் தேர்வுக்கான பயிற்சிக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது, ஏழை மாணவர்களை வேறுபடுத்தும் செயல். பயிற்சி மையங்களால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளின் கதவுகள் திறப்பதில்லை . நீட் தேர்வை ஏன் இந்த அரசு திரும்பப்பெறக்கூடாது?’என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

 

ஏழை – எளிய மக்களின் மருத்துவக் கல்விக் கனவை நீட் சிதைக்கிறது என நாம் சொன்னபோதெல்லாம் மத்திய அரசு உள்நோக்கம் கற்பித்தது. இப்போது சென்னை உயர்நீதிமன்றமே அதனை வழிமொழிந்துள்ளனர். இப்போதாவது நீதிமன்றம் காட்டும் சமூகநீதிப் பாதையில் மத்திய – மாநில அரசுகள் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.