இடி, மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு..!

கேரளாவில் இடி. மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதால் ஆலப்புழா, இடுக்கி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 

இன்று பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, பாலக்காடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் லட்சத்தீவு மற்றும் கேரள கடற்கரை பகுதிகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 


இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு..!

தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தென்தமிழகம், கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளை ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!

ங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

 

திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நெல்லை, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை, திருவள்ளூர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.