தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

மிழ்நாட்டில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகியவற்றால் வரும் 13ஆம் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் கனமழை டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழையும்,  அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.