பச்சமலைக்குச் செல்லும் மலைப்பாதையில் திடீரென மண் சரிவு
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள பச்சமலைக்குச் செல்லும் மலைப்பாதையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அந்தப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, உடனடியாக வரவழைக்கப்பட்ட ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன், மலைப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவைச் சரிசெய்யும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.






