பள்ளியில் சுருண்டு விழுந்து மாணவி மரணம்..!
திருப்பூர் உடுமலை அரசுப் பள்ளியில் மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவி புவனேஸ்வரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.
இன்று மதியம் வழக்கம்போல் விடுதியில் உணவருந்திவிட்டு பள்ளி சென்ற அவர், வகுப்பறையில் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவி உயிரிழந்துவிட்டதாக டாக்டர் தெரிவித்துள்ளார். இறப்புக்கான காரணம் இன்னும் தெரிய வரவில்லை.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





