தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான கலைத்திருவிழா..!
தமிழக அரசு தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் “சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு ” என்ற தலைப்பில் மாநில அளவிலான கலைத்திருவிழா 2024-25 போட்டிகள் கடந்த சில வாரங்களாக பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் தமிழகம் முழுவதும் நடந்தது.

மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து மாநில அளவிலான கலைத் திருவிழாவின் இறுதிப்போட்டிகள் 1 முதல் 5 ம் வகுப்பு மாணவர்களுக்கு கோவை கோவை கே.பி.ஆர் கல்லூரியிலும், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு காங்கேயம் நத்தக்காடையூர் காங்கேயம் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ், பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி வளாகத்திலும், 9, 10 மாணவர்களுக்கு ஈரோட்டிலும், 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு நாமக்கல்லிலும் நடந்தது.

திருப்பூர், காங்கேயம் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் நடந்த கலைத் திருவிழாவிற்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் வை.குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் வரவேற்றார். கலைத்திருவிழாவை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல், களிமண் சுதை வேலைப்பாடு, மணல் சிற்பம், செவ்வியல் இசை (தனி பாட்டு), நாட்டுப்புறப் பாடல் (தனி பாட்டு), வில்லுப்பாட்டு, கிராமிய நடனம் குழு (4-9 பேர் ), பரதநாட்டியம் குழு (4-9 பேர் ), தனி நபர் நடிப்பு, நகைச்சுவை வழங்குதல், பல குரல் பேச்சு ஆகிய ஓவியம், செவ்வியல 11 பிரிவுகளில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த 2050 பேர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவரும் தங்களது, மற்றும் தங்கள் குழுவினரின் தனித்திறமையை வெளிகாட்டினர்.

கலைத்திருவிழாவில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் உடன் வந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் 3ந் தேதி இரவு முதல் தங்கும் வசதி, உணவு வசதி உள்பட அனைத்து வசதிகளும்பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது இந்த கலை திருவிழாவில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவருக்கு கலையரசன் பட்டமும் மாணவிக்கு கலையரசி பட்டமும் ஒவ்வொரு பிரிவிலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





