--- --:--:-- --

பெண் விவசாயிகளுடன் நடனமாடி மகிழ்ந்த சோனியா காந்தி..!

4

பெண் விவசாயிகளுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நடனமாடி மகிழ்ந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹரியானா மாநிலத்திற்கு சென்ற ராகுல் காந்தி அங்கு விவசாயிகளோடு சேர்ந்து நாத்து நட்டார்.

 

அப்பொழுது சில பெண் விவசாயிகள் டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் வீட்டை பார்க்க வந்திருந்தனர். இதையடுத்து ஹரியானா விவசாயிகளை மத்திய உணவிற்கு வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

 

அவர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடும் செய்து கொடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று வந்த பெண் விவசாயிகள் சோனியா காந்தி உடன் நடனம் ஆடி மதிய உணவையும் சாப்பிட்டனர். ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் அங்கிருந்த பெண் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon