--- --:--:-- --

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கரம் : வெடி விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

1

சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 5 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான சுதர்சன் என்ற பட்டாசு ஆலை உள்ளது. இங்கு இன்று வழக்கம் போல் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

இந்நிலையில், பட்டாசுக்கு மருந்து நிரப்பும் பணியின் போது உராய்வு ஏற்பட்டு, வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் பட்டாசு ஆலையில் இருந்த ஆறுக்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து தரைமட்டமாகின.

 

இந்த வெடி விபத்தில் இதுவரை 5 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.இந்த வெடி விபத்தில் இதுவரை 5 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon