கூட்டு பாலியல் வன்கொடுமை.. வீடியோ எடுத்து மிரட்டல்..!
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே இளம் பெண் அளித்த பாலியல் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் மூன்று பேர் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அந்த பெண் கடந்த ஆண்டு மைனர் பெண்ணாக இருந்த பொழுது கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாக அந்த பகுதியைச் சேர்ந்த சந்துரு மற்றும் அவருடைய நண்பர்கள் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த நிலையில் மூன்று பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய சந்துரு, அவருடைய நண்பர் தனுஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள 11 வயது சிறுவனையும் அவர்கள் வலை வீசி தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





