தமிழ்நாட்டில் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவு..!
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெறும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் அரசு பள்ளி மாணவர்களின் மதிப்பெண் விழுக்காடு மிகவும் குறைவாக உள்ளதாகவும் சராசரியாக 50 முதல் 60 விழுக்காடு மதிப்பெண்கள் பெறும் வகையில் மாணவர்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் பேசிய செயலாளர் பல அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு அடிப்படை வாசிப்பு திறன் எழுதும் திறன் இல்லாமல் இருப்பதாகவும் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் மாணவர்களுக்கு புரிகிறதா இல்லையா என்பதை கல்வி வல்லுநர்கள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காலை அல்லது மாலையில் கூடுதல் நேரம் ஒதுக்கி பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





