--- --:--:-- --

திட்டமிட்டபடி வெளியாகாத “சங்க தமிழன்” திரைப்படம்

4

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சங்கத்தமிழன் திரைப்படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பைனான்ஸ் பிரச்சினைகளால் தமிழகத்தில் படம் வெளியாகாமல் இருப்பது ஒன்றும் புதிதல்ல.

 

கோலிவுட்டில் மட்டும் 400க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸாக காத்திருக்கின்றனர். ஆனால் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியாவதில் சிக்கல் எழும் போது அது சர்ச்சையாகிறது. அப்படித்தான் சங்கத்தமிழன் தற்போது பேசுபொருள் ஆகியுள்ளது.

 

இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள படம்தான் சங்கத்தமிழன். நேற்று ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த படம் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 

வீரம், ஜில்லா ஆகிய படங்களை தயாரித்த விஜயா புரொடக்ஷன் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரித்துள்ளது. இந்தநிலையில் சில விநியோகஸ்தர்களுக்கு நிலுவைத் தொகையை தரவில்லை என்பதால் இப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை உடன்பாடு ஏற்பட்டதாக தெரியவில்லை. அதேபோன்று வீரம் திரைப்படத்திற்கு பிறகு விஜயா புரொடக்ஷன் நிறுவனம் தர வேண்டிய கேளிக்கை வரியை சரிவர செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

 

மேலும் நளனும் நந்தினியும் திரைப்படத்திற்கு தரவேண்டிய 15 லட்சம் பணத்தை லிப்ரா புரொடக்ஷனுக்கு தராத காரணத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் இருபத்தி ஒன்றாம் தேதி வரை படம் வெளியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இதேபோன்று விஜய் சேதுபதி நடித்த விளம்பரம் ஒன்றும் அவருக்கு நெருக்கடியை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இப்படி அடுக்கடுக்கான காரணங்களால் சங்கத் தமிழன் தடைபட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon