ரூ.6,000 வெள்ள நிவாரணம்.. அரசாணை வெளியீடு..!
சென்னை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களுக்கும் நிவாரண நிதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக ரூ.6,000 வழங்குவதற்கான அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
மழை வெள்ள நிவாரணம் வழங்கப்படுவது தொடர்பாக அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டத்தில் முழுமையாகவும் ஸ்ரீபெரும்புதூரில் மூன்று வருவாய் கிராமங்களிலும் வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி உள்ளிட்ட ஆறு வட்டங்களில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





