பபுள்கம் என நினைத்து நிக்கோட்டினை சாப்பிட்டதால் கடும் வாந்தி, மயக்கம்..!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அரசு தொடக்கப்பள்ளியில் புகையிலை பழக்கத்தை மறக்க உபயோகிக்கும் பபுள்காமை மிட்டாய் என நினைத்து சாப்பிட்ட மூன்றாம் வகுப்பு மாணவ, மாணவிகள் 13 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மிட்டாய் என நினைத்து சாப்பிட்ட 13 மாணவன் மாணவிகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.





