--- --:--:-- --

நதிகளை இணைக்க அரசுப்பள்ளி மாணவியின் அரிய கண்டுபிடிப்பு

Capture

நிலத்தின் அடியே செல்லும் குழாய்களை கொண்டு நதிகளை இணைக்கும் அரசு பள்ளி மாணவியின் கண்டுபிடிப்பு சிறந்த படைப்பாக தேர்வு செய்யப்பட்டது. இதன் மூலம் அரசு பள்ளி மாணவி இஸ்ரோ மையத்தை பார்வையிடும் வாய்ப்பை பெற்றார். கரூர் மாவட்டத்தில் 2018 2019 ஆம் ஆண்டிற்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

 

இதில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவி சபிதா இந்திய நதிகளை எவ்வாறு எழுத இணைப்பது என்பது பற்றி செயல்முறை விளக்கம் தந்தார் நிலத்தின் அடியே செல்லும் குழாய்களை கொண்டு இந்திய நதிகளை இணைக்க முடியும் என்பது மாணவியின் படைப்பாகும். இந்த கண்டுபிடிப்பின் மூலமாக நதிகளை இணைக்க மூன்று லட்சம் கோடி மட்டுமே செலவாகும் எனக் கூறும் மாணவி கால்வாய்கள் மூலமாக நதிகளை இணைத்தால் 30 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என தெரிவித்தார்.

 

மாணவியின் இந்த படைப்பு சிறந்த கண்டுபிடிப்பாக தேர்வு செய்யப்பட்டதால் கேரளாவில் உள்ள இ-சேவை மையத்தை பார்வையிடும் வாய்ப்பை அவர் பெற்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon