--- --:--:-- --

பெரியார் குறித்த அவதூறு பேச்சு – மதுரையில் ரஜினியின் உருவபொம்மை எரிப்பு

7

பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக கூறி மதுரையில் நடிகர் ரஜினிகாந்தின் உருவ பொம்மையை எரித்து ஆதிதமிழர் பேரவையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

 

இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், மதுரையில் ஆதித்தமிழர் பேரவையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நடிகர் ரஜினிகாந்தின் உருவ பொம்மையை எரித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon