--- --:--:-- --

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் முதலீடு குறித்து ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்..!

1

மிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்யவில்லை என அந்நிறுவனம் மறுத்துள்ளதால் திமுகவின் வாக்குறுதிகள் வெறும் வார்த்தைகளாகவே இருப்பது அம்பலமாகியுள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திமுக ஆட்சியில் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லை என்று எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

 

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என தொழில் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா பெருமையோடு தெரிவித்தார். முதல்வரும், அமைச்சரும் மாறி மாறி பெருமை பேசினார்கள். ஆனால் பூனைக்குட்டி வெளியே வந்தது போல் தமிழகத்தில் Foxconn நிறுவனம் முதலீடு செய்யவில்லை என அந்நிறுவனம் மறுத்துள்ளது. இதனால், திமுக வின் வாக்குறுதிகள் வெறும் வார்த்தைகளாகவே இருப்பது அம்பலமாகியுள்ளது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் இதனை வெளிப்படுத்தியுள்ளது.

 

அதிமுக ஆட்சியில் எல்லா புயல்களையும் சிறப்பாக கையாண்டோம். தேனியில் பெய்த மழையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு அமைச்சர் கூட நேரில் சென்று பார்க்கவில்லை. மதுரை மேயர் ராஜினாமா செய்துள்ளார். தமிழ்நாட்டில் மழையினால் எத்தனை இடங்கள் பாதிக்கப்படும், தாழ்வான பகுதிகள் எத்தனை என்பதை கண்டறிய வேண்டும். 3 மாதம் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? வடகிழக்கு பருவ மழை தொடங்கவுள்ள நிலையில் கட்டுப்பாட்டு மையத்தில் சென்று “எல்லாம் நன்றாக உள்ளது” என முதலமைச்சர் சொல்வதால் தான் பயமாக உள்ளது.

 

டிடிவி தினகரன் முதலமைச்சரை புகழ்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆர்.பி.உதயகுமார், ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவர்களை பற்றி பேச வேண்டும். வேடிக்கை பார்ப்பவர்களை விவாதிப்பது வெட்டி பேச்சு, வெறும் பேச்சு, வேகாத பேச்சு. திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம்.

 

விஜய் புதிய கட்சி தொடங்கியுள்ள நிலையில், திமுகவை வீழ்த்த வேண்டும் என ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய நேரம் இது. சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்தவர்களே தலைவர்களாக உள்ளனர். சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுத்தவர்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்கள். விஜய், நல்ல வாய்ப்பை தவற விடாமல், தொண்டர்களின் விருப்பத்தை அலசி ஆராய வேண்டும். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஆண்டவன் ஆனாலும் காப்பாற்ற முடியாது. தவெக – வை ஆண்டவன் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது என தெரிவித்தார்.

Right Menu Icon