--- --:--:-- --

கர்தார்பூர் வழிதடத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

6

பாகிஸ்தான், கர்தார்பூர் குருத்வாராவிற்கான பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைக்க உள்ளார். பாகிஸ்தானின் கர்தார்பூரில் குருத்துவாரா தர்பார் சாகிப் கட்டப்பட்டுள்ளது. இந்த குருத்வாராவிற்கு செல்வதை சீக்கியர்கள் புனித கடமையாக கருதுகின்றனர்.

 

இந்தியாவில் இருக்கும் சீக்கியர்கள் விசா உள்ளிட்ட எந்த நடைமுறையும் இன்றி குருத்துவாராவிற்கு சென்று வருவதற்காக கர்தார்பூர் வழித்தடத்திட்டம் உருவாக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கும். பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர்சிங்கும் முதற்கட்டமாக கர்தார்பூர் செல்லும் 550 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

 

இவர்கள் செல்லும் வழித்தப்பாதையை இந்திய எல்லையிலிருந்து பிரதமர் மோடியும் பாகிஸ்தான் எல்லையிலிருந்து அந்நாட்டு பிரதமர் இம்ரான்கானும் திறந்து வைக்க உள்ளனர். இந்த நிகழ்வில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவும் கலந்து கொள்ள உள்ளார்.

 

கர்தார்பூரில் உள்ள குருத்வாராவிற்கு இந்தியாவிலிருந்து செல்ல பாஸ்போர்ட் தேவையில்லை என இம்ரான்கான் அறிவித்திருந்தார். ஆனால் அதற்கு அந்நாட்டு ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் இந்தியாவில் இருந்து வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும் என பாகிஸ்தான் தெரிவித்திருப்பதாகவும் இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

 

முதலில் குருத்வாராவிற்கு செல்லும் சீக்கியர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவர் என கூறிய பாகிஸ்தான் தற்போது பக்தர் ஒருவருக்கு சுமார் 1500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon