நடுவழியில் தொழுகை.. பஸ் டிரைவருக்கு சிக்கல்..!
கர்நாடகாவில் அரசுப் பேருந்தை நடுவழியில் நிறுத்திவிட்டு டிரைவர் தொழுகை நடத்தியது சர்ச்சையாகியுள்ளது. டிரைவரின் செயலால் பயணிகள் தவிப்புடன் அமர்ந்திருக்க, வெளியே போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து அம்மாநில போக்குவரத்துத் துறை விசாரணையை தொடங்கியுள்ளது. குற்றம் நிரூபணமானால் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.






