--- --:--:-- --

தொகுதி அடையாளம் காண்பதில் இழுபறி… பாமக அவசர ஆலோசனை

Ramados 01

அதிமுக கூட்டணியில், தொகுதிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் உருவாகி இருப்பதால், அது குறித்து விவாதிக்க, அவசர கூட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அழைத்துள்ளார்.

 

தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறவுள்ளது. அதை தொடர்ந்து மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தலில் வேட்புமனு தாக்கல் வரும் 12ம் தேதி தொடங்குகிறது.

 

இதனால், அதிமுக – திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதிமுக கூட்டணியில் முதலில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன், வட மாவட்டங்களில் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் உத்தேச பட்டியலையும் அதிமுக தலைமையிடம் பாமக வழங்கியுள்ளது.

 

ஆனால், அதில் சில தொகுதிகளை தேமுதிக கேட்டிருப்பதாகவும், அதிமுக போட்டியிட விரும்பும் தொகுதிகளும் பாமகவின் பட்டியலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, பாமகவுக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகளை அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் தொடங்க 3 நாட்களே உள்ள சூழலில், அதிமுக கூட்டணியில் தொகுதிகளை ஒதுக்குவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

 

இச்சூழலில், பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம், இன்று நடைபெறுகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில், அதிமுகவுடன் எந்தெந்த தொகுதிகளை பெறுவது என்பது குறித்து, காணொலி வாயிலாக விவாதிக்கப்படுகிறது. இத்தகவலை பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon