பீகார் வெற்றிக்குப் பிறகு காங்கிரஸைத் தாக்கிய பிரதமர் மோடி
பீகார் தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி பேசுகையில், “கடந்த 6 தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, இன்று மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நமது சட்டமன்ற உறுப்பினர்களை விடக் குறைவு ” என்று கூறினார்.
மேலும் அவர், “பல மாநிலங்களில் காங்கிரஸ் பல தசாப்தங்களாக ஆட்சிக்குத் திரும்பவில்லை; 2024-க்குப் பிந்தைய 6 சட்டமன்றத் தேர்தல்களில் அது 100 இடங்களை மட்டுமே வென்றுள்ளது” என்று தெரிவித்தார்.






