--- --:--:-- --

உதகைக்கு சுற்றுலா போகப்போறீங்களா? மலைரயில் சேவை ஊட்டி வரை நீட்டிப்பு

Ooty train 03

கோவை: மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான சிறப்பு மலை ரயில் சேவை, ஊட்டி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை தினசரி காலை 7.10 மணிக்கு நூற்றாண்டு பழமைவாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கோடை காலத்தில் வருகை தரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கூடுதல் சிறப்பு மலை ரயில் போக்குவரத்து கடந்த 8.12.18 அன்று துவக்கப்பட்டது.

 

 

இந்தச் சிறப்பு மலைரயில், வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு,  12.30 மணிக்கு குன்னூரை சென்றடையும். குன்னூர் வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்ததால் உதகை செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் குன்னூரில் இருந்து மாற்று வாகனம் மூலம் ஊட்டிக்கு செல்ல வேண்டியிருந்தது.

 

மலை ரயிலை போலவே, கோடை கால சிறப்பு மலை ரயிலையும் ஊட்டி வரை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையேற்று இன்று முதல் சிறப்பு மலை ரயிலின் சேவையினை உதகை வரை, ரயில்வே நிர்வாகம்  நீட்டித்துள்ளது.  மொத்தம் 132 இருக்கைகள் கொண்ட இந்தச் சிறப்பு மலைரயிலில் முதல் வகுப்புக்கு, 16 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 

உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளதும், யுனெஸ்கோ அந்தஸ்து பெற்றதுமான ஊட்டி மலை ரயிலில் பயணித்து நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வருவது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் இந்தக் கூடுதல் ரயில் சேவை ஊட்டி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் புதிய வசதிகளுடன் நீலகிரியின் இயற்கை எழிலை முழுமையாக கண்டு ரசிக்கும்படியான ரயில் பெட்டிகளில் பயணிப்பது சுற்றுலா பயணிகளிடையே உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon