ஜூன் 22ல் ஆஜராக நுபுர் சர்மாவுக்கு சம்மன்..!
பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை வரும் 22ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. தொலைக்காட்சி விவாதத்தின்போது முகமது நபி குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் பாஜகவை சேர்ந்த நுபுர் ஷர்மா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் டெல்லி பாஜக ஊடக தலைவராக இருந்த நவீன்குமார் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இதற்கிடையில் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில் அதனை அவரும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனால் அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் டெல்லி காவல்துறை பாதுகாப்பு வழங்கியுள்ளது. இதற்கிடையே அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வரும் 22ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர்.





