--- --:--:-- --

அடுத்த ஒன்றரை வருடத்திற்கு நடிக்கவில்லை! சமந்தா

images (3)

நடிகை சமந்தா அடுத்த ஒன்றரை வருடத்திற்கு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. பானா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. ஏராளமான தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் .கடந்த 2017 ஆம் ஆண்டு நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு படங்களில் நடித்து வந்தார்.

 

தற்பொழுது சமந்தா நடித்த பேபி திரைப்படம் வெளியாகி அவரது ரசிகர்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்த ஒன்றரை வருடத்திற்கு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி வைக்கவும், குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தவும் சமந்தா முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon