நிலநடுக்கமே வந்தாலும் முல்லைபெரியாறு அணைக்கு ஒண்ணும் ஆகாது!
நிலநடுக்கம் ஏற்பட்டாலும் முல்லைப்பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்படாது என மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகவும்,இதனால் இடுக்கி மக்களுக்கு ஆபத்து எனவும் மக்களவையில் இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவையில் தெரிவித்தார்.
எனவே முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கிறது என கேள்வி எழுப்பினார். இதற்கு நிலநடுக்கம் ஏற்பட்டாலும் முல்லை பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்படாது என தெரிவித்த மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அணை எல்லா வகையிலும் பாதுகாப்பாக இருக்கிறது என்று பதிலளித்தார்.
மேலும் ஜூன் மாதத்தில் உயர்மட்டக்குழு முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டு ஆலோசனை நடத்தியதாக தெரிவித்த மத்திய அமைச்சர், கூடுதல் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கேரள அரசின் ஒத்துழைப்பு தேவை என தெரிவித்துள்ளார். இதுவரை நடைபெற்றுள்ள ஆய்வு மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் அணை பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பதிலளித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




