நடுவானில் இயந்திரக் கோளாறு – விமானம் அவசரமாக தரையிறக்கம்
சென்னையில் இருந்து கொச்சி புறப்பட்ட ஸ்பைஜெட் விமானம், நடுவானில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால், சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானியின் துரித நடவடிக்கையால், விமானம் ஆபத்திலிருந்து தப்பியதோடு, விமானத்தில் பயணித்த 147 பயணிகள் உட்பட 155 பேர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்; விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு சரிசெய்யப்பட்டு வருகிறது.





