வாகனம் பார்கிங் தகராறில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சண்டை..!
Man and woman near car
சென்னை அடுத்த மாங்காட்டில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாகனம் பார்கிங் தொடர்பான தகராறில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் தாக்கிக் கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
பத்மாவதி நகர் பகுதியில் வசிக்கும் இருவருக்கும் வாகனங்களை நிறுத்த குடியிருப்பில் தனித்தனியே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பெண்ணின் இடத்தில் மோகனுக்கு தெரிந்த நபர் வாகனம் நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி நித்யா கேட்கச் சென்ற பொழுது மோகன் கதவை வேகமாகத் திறந்ததாகவும் அவரது தாயார் காயமடைந்ததாகவும் அதற்கு காரணம் அவர்தான் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.






