--- --:--:-- --

பொங்கல் நாட்களில் நடைபெறவிருந்த கேந்திரிய வித்யாலாயா தேர்வுகள் தேதி மாற்றம்..!

1

துரை மக்களவை எம்.பி. சு.வெங்கடேசனின் கோரியை ஏற்று, பொங்கல் நாட்களில் தேர்வுகள் நடத்தப்படாது என கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனமான கேந்திரிய வித்யாலயா நடத்தும் பள்ளிகளில் ஜனவரி 13 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை 6 முதல் 11 ஆம் வகுப்புகளுக்கு பருவத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.

 

பொங்கல் பண்டிகை காலமான இந்த தேதிகளில் தேர்வு நடத்துவதை கைவிட வேண்டும் என மதுரை மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன் கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் கேந்திர வித்யாலா துணை ஆணையர், சு.வெங்கடேசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஜனவரி 13 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை தேர்வுகளை நடத்த வேண்டாம் என சென்னை மண்டல கே.வி. பள்ளி முதல்வர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.அதேநேரத்தில் மத்திய அரசின் நிறுவனமான கேந்திர வித்யாலயா நிர்வாகம், மாநில அரசு விடுமுறைகளை பின்பற்றுவதில்லை எனவும் இயற்கை பேரிடர் தொடர்பான மாநில அரசுகளின் விடுமுறைகளை மட்டுமே பின்பற்றுவதாகவும் கூறியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon