இந்தோனேசியா இயற்கை பேரிடர் பலி எண்ணிக்கை 9ஆக உயர்வு..!
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் 9 பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட தொடர் வெடிப்பை தொடர்ந்து வீடுகள் இடிந்தன.
இதில் சிக்கியவர்களில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக இந்தோனேசியாவின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பழுப்பு நிற சாம்பல் காற்றில் பறந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.






