ஆசிரியர்களின் மெத்தன போக்கால் 9 வயது சிறுமி மாயம்..!
செங்கல்பட்டு அருகே ஆசியர்களின் மெத்தன போக்கால் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமியை இரண்டு மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.
ஆலத்தூரை சேர்ந்த சுரேஷ் கற்பகம் தம்பதியினரின் 9 வயது குழந்தை மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் திருப்போரூரில் உள்ள மூளை வளர்ச்சி குறைபாடு உள்ளவர்களுக்கான சிறப்பு பள்ளியில் படித்து வந்தார். இன்று காலை பள்ளிக்கு சென்ற அவர் மாயமானார்.
இதுகுறித்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த தகவலை அனைத்து காவல் நிலையங்களுக்கும் போலீசார் தெரியப்படுத்தினார்.
சிறுமியின் புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பிய நிலையில் திருப்போரூரில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி சென்ற மாநகர பேருந்து ஒன்று சிறுமி தன்னந்தனியாக பயணிப்பதை கவனித்த நடத்துனர் வடபழனி பேருந்து நிலையத்தில் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதையடுத்து அந்த சிறுமி .மகளிர் காவல் நிலைய காவலரிடம் ஒப்படைக்கப்பட்டார் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் காரில் வந்து குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.





