--- --:--:-- --

இலங்கையில் நடக்கும் சம்பவங்களால் மனம் வருந்துகிறது..!

6

லங்கையில் நடக்கும் சம்பவங்களை பார்த்து மனம் வருந்துவதாக பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார். இலங்கையை சேர்ந்த மாடல் அழகி கடந்த 2006ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் ஸ்ரீலங்கா பட்டத்தை வென்றவர்.

 

இவர் தற்போது பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இலங்கை பிரஜையாக இருப்பதால் அங்கு நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது வருத்தமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

பலரும் பலவிதமான கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும் ஆனால் அவர்களுக்காக இரண்டு நிமிடம் அமைதியாக பிரார்த்தனை செய்தால் போதும் என பதிவிட்டுள்ளார்.

 

Right Menu Icon