நம்ம ஹ ஹா ஹாஷினி பிறந்தநாளுக்கு கணவர் செய்த ட்வீட்
பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் தனது மனைவி ஜெனிலியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து போட்ட ட்வீட்டை பார்த்து ரசிகர்களால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்த ஜெனிலியா பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். ஜெனிலியா, ரித்தேஷ் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
ஜெனிலியா இன்று தனது 32 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் ஜெனிலியாவை வாழ்த்தி ரித்தேஷ் தேஷ்முக் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நம் நெருங்கிய தோழியே வாழ்க்கைத் துணையாக வந்தால் வாழ்வு வரமாகும்.என் டார்லிங் ஜெனிலியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

எனக்கு தெரிந்து நீ தான் ஸ்டிராங்கான தாய். நம் குடும்பம் ஒன்றாக இருக்க நீ தான் காரணம். இந்த வாழ்க்கையில் செய்யும் அனைத்து நல்ல காரியங்களுக்காக அடுத்த பிறவியிலும் உனக்கு அதே கணவரை அளித்து கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று வாழ்த்தியுள்ளார்.ரித்தேஷின் வாழ்த்து ட்வீட்டில் கடைசி வரி தான் அல்டிமேட் என்கிறார்கள் பிரபலங்களும், ரசிகர்களும்.
திருமணம், குழந்தைகள் என்றான பிறகு ஜெனிலியா படங்களில் அவ்வளவாக கவனம் செலுத்துவது இல்லை.
இந்நிலையில் அவர் கடந்த ஆண்டு மராத்தி திரையுலகில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். ஜெனிலியா தன் மனதிற்கு பிடித்தவற்றை செய்ய முழு உரிமை அளித்துள்ளார் கணவர் ரித்தேஷ். பாலிவுட் கொண்டாடும் தம்பதிகளில் ஒன்றாக உள்ளது ஜெனிலியா-ரித்தேஷ் தம்பதி. ரித்தேஷ் தேஷ்முக்கின் பெயர் எந்த கிசுகிசுக்களிலும் வருவது இல்லை.தான் மிகவும் கொடுத்து வைத்தவள், கடவுளின் செல்லக் குழந்தை என்று ஜெனிலியா அவ்வப்போது கூறி வருகிறார்.





