--- --:--:-- --

உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்..!

4

வார இறுதி நாட்கள், முகூர்த்த தினம், மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.

 

வார இறுதி நாட்கள், முகூர்த்தம், மிலாடி நபி உள்ளிட்ட தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் ஆம்னி பேருந்துகளில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் விடுமுறை தினத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இயல்பை விட 2 மடங்கு அதிக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

தொடர் விடுமுறையை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Right Menu Icon