பட வெளியீட்டு விழாவில் நடனமாடிய ஜி.பி.முத்து..!
டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து என்ன வாழ்க்கைடா வெளியீட்டு விழா வீடியோவில் நடனமாடியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற என்ன வாழ்க்கைடா ஆல்பம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஜி பி முத்து டிக் டாக்கிற்கு தடைவிதிக்கப்பட்டது மனதிற்கு கஷ்டமாக இருந்தது என தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னை யார் திட்டினாலும் இந்த காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விடுவேன் என்று கூறியுள்ளார். நிகழ்ச்சி நிறைவில் என்ன வாழ்க்கைடா பாடலுக்கு ஜி பி முத்து சக நடிகர்களுடன் சேர்ந்து மேடையில் நடனம் ஆடினார்.






