--- --:--:-- --

காதலன் வீட்டில் காதலி மரணம்..!

3

ஜெய் ராமாபுரத்தில் காதலன் வீட்டிலேயே காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவரது மகள் ஸ்ரீஷா. பட்டப்படிப்பு முடித்த ஸ்ரீஷா தனியார் மொபைல் விற்பனையகத்தில் வேலை பார்த்துக் கொண்டுள்ளார்.

 

ஸ்ரீஷாவிற்கு ராமபிரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரது நட்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து இருவரும் காதலித்து வந்ததாகவும் கடந்த 27ஆம் தேதி மணிகண்டனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை பார்த்துவிட்டு வருவதாக ஸ்ரீஷா பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

 

நேற்று ராமாபுரத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மணிகண்டன் வசித்து வரும் வீட்டில் ஸ்ரீசா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் ஸ்ரீஷாவின் பெற்றோருக்கும் அவருடைய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

 

தொடர்ந்து ஸ்ரீசாவின் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வரும் சூழலில் அவருடைய சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon