பக்தி பாடல் பாடிய ஜெர்மனிய முருக பக்தர்கள்..!
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள சிவசுப்பிரமணி கோயிலில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சுவாமியை தரிசித்த பொழுது கோயில் குருக்கள் முருக பக்தி பாடல்கள் பாட இந்த பெண்களும் பக்தியுடன் பாடல்களை பாடி வந்தனர். வெளிநாட்டவர்கள் இதுபோன்ற தமிழ் பக்தி பாடல்களை பாடியதை கண்ட பக்தர்கள் பலர் வியந்தனர்.






