ஆற்றில் தத்தளித்த 9 பெண்களை மீட்ட மீனவர்..!
திருச்செந்தூர் அருகே உள்ள புன்னைக்காயல் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட 9 பெண்களை தனி ஒருவனாக நின்று மீட்டமை நபரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயலில் தாமிரபரணி ஆற்றின் அருகே அமைந்துள்ள புனித தோமையார் ஆலயம் உள்ளது.
ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் அண்மையில் வந்த சில பக்தர்கள் அந்த ஆற்றில் இறங்கி ஆலயத்திற்கு செல்ல முற்பட்டபோது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் ஒன்பது பெண்கள் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி தத்தளித்தனர்.
இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த மீனவர் சைமன் என்பவர் உடனே அவரது படையில் தனி ஒருவராக சென்று 9 பெண்களையும் மீட்டுள்ளார். இதனால் அனைவரும் உயிர் தப்பினர்.






