“தந்தை கமல்ஹாசனின் அரசியலுக்கு தனது ஆதரவு எப்போதும் உண்டு”:சுருதிஹாசன்
தனது தந்தை கமலஹாசன் அரசியலில் எடுக்கக்கூடிய அனைத்து முடிவுகளுக்கும் ஆதரவளிப்பேன் என நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். கோவையில் தனியார் செல்போன் கடை திறப்பு விழாவில் பங்கேற்ற அவர் ரசிகர்கள் மத்தியில் பாடல் பாடியும், செல்பி எடுத்து மகிழ்ந்தார்.
இந்தியாவில் ஆல்பம் பாடல்களை எடுக்கவும் எதிர்காலத்தில் திரைப்படங்களுக்கு இசை அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக ஸ்ருதிஹாசன் தெரிவித்தார். ரஜினி, கமல் இணைப்பு குறித்து தனக்கு எந்த விதமான கருத்தும் இல்லை என்று அவர், தந்தை கமலஹாசனின் அரசியலுக்கு தனது ஆதரவு எப்போதும் உண்டு எனவும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




