முதல்வராவோம் என இ.பி.எஸ் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்..! “கமல் 60” விழாவில் ரஜினி பரபரப்பு பேச்சு!!
தாம் முதல்வர் ஆவோம் என்று எடப்பாடி பழனிச்சாமி 2 வருடங்களுக்கும் ன்பு கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார் என்று, கமல் 60 விழா மேடையில் நடிகர் ரஜினி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், திரையுலகில் காலடி வைத்து 60 ஆண்டுகள் ஆகிறது. இதை பிரமாண்டமாக கொண்டாடும் வகையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ‘கமல் 60’ என்ற தலைப்பில் பிரமாண்ட பாராட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் நடிகர் ரஜினி உள்பட திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.

இந்த விழாவில் நடிகர் ரஜினி பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. ரஜினி பேசுகையில், கமல் ஒரு ஜீனியஸ்.அவருடைய கடின உழைப்பு தான் அவரை இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. கமலுக்கும் எனக்குமான கருத்துகளில், சித்தாத்தங்களில் பல வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் எங்கள் நட்பில் எந்த மாற்றமும் ஏற்பட்டது கி டையாது. கமலுக்கும் எனக்கு மான 43 ஆண்டு கால நட்பை யாராலும் பிரிக்கவோ, உடைக்கவோ முடியாது. நான் அரசியலுக்கு வந்த பிறகும் நாங்கள் சண்டை போட்டுக்கொள்ளமாட்டோம் .
இந்த மேடையில் பேசிய பலரும் அரசியல் குறித்து பேசினார்கள்.
கமல், ரஜினி என அனைவரது வாழ்க்கையிலும் அற்புதங்கள் நிகழ்வது சகஜம் தான். 2 வருடங்களுக்கு முன்னர், தமிழகத்தின் முதல்வராவோம் என எடப்பாடி பழனிச்சாமி கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். ஆனால் அதிசயம் நடந்து அவர் முதல்வராகி விட்டார்.
அவர் முதல்வரான பின்னர் கூட, இந்த அரசாங்கம் 20 நாள் கூட தாங்காது என்றார்கள். அப்புறம் 2 மாதம் தாங்காது… 6 மாதம் தாங்காது என்றெல்லாம் கூட சொன்னார்கள். ஆனாலும் ஆட்சி கவிழா மல் இன்று வரை தொடர்கிறது .அதுதான் அதிசயம் என்பது. எனவே அதிசயம், அற்புதம் என்பது நேற்றும் நடந்தது. இன்றும் அதிசயம் நடக்கிறது… நாளையும் அற்புதம், அதிசயம் நிகழும் என்று ரஜினி பஞ்ச் வைத்து அதிரடியாக பேசியது விழா மேடையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




