ஊரடங்கால் நேர்ந்த சோகம் : நாக்பூரில்சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்ட சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது இருந்து நடந்தே வந்த நாமக்கல் இளைஞர்..! பாதி வழியில் உயிரிழந்த பரிதாபம்!!
நாடு முழுவதும் திடீரென ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால், போக்குவரத்து வசதியின்றி, நாக்பூரில் இருந்து நாமக்கல்லுக்கு நடைப்பயணமாகவே வந்த 22 வயது இளைஞர் வழியிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
நாமக்கல்லைச் சேர்ந்த 22 இளைஞர் லோகேஷ் சுப்பிரமணியன். இவர் நாக்பூரில் பணிபுரிந்து வந்தார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மாதம் 24-ந் தேதி நாடு முழுவதும் திடீரென ஊரடங்கை உத்தரவை பிரதமர் மோடி அமல்படுத்தினார்.
இதனால், அன்றிரவு முதலே நாடு முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், லோகேஷ் சுப்பிரமணியனும், அவருடன் பணியாற்றிய 30 தமிழக இளைஞர்களும் ஊர் திரும்ப முடியாமல் பரிதவித்தனர். வேறு வழியின்றி நடந்தே செல்வது என முடிவு செய்தனர். 3 நாட்களாக சுமார் 500 கி.மீ. தூரத்திற்கு நடைப்பயணமாகவும், அவ்வப்போது சாலையில் சென்ற லாரிகள் மூலமும் தெலுங்கானா மாநிலத்தின் செகந்திராபாத் நகரை வந்தடைந்தனர். அங்குள்ள ஒரு சமுதாய நலக்கூடத்தில் நேற்று முன்தினம் இரவு தங்கியுள்ளனர்.

இந்நிலையில், வெயிலில் தொடந்து நடந்ததில் மிகவும் சோர்வடைந்திருந்த லோகேஷ், சக நண்பர்களுடன் முகாமில் உள்ள ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த போது நிலைகுலைந்து மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அங்கு வந்த மருத்துவர் லோகேஷை பரிசோதித்து பார்த்த போது அவர் உயிரிழந்துவிட்டது தெரிய வந்தது.. இதனால் அவருடன் வந்த சக நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
லோகேஷ் சுப்பிரமணியன் உயிரிழந்தது தொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, லோகேஷ் பால சுப்பிரமணியின் உடலை அவரது சொந்த ஊரான நாமக்கலுக்கு கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
ஊரடங்கு காரணமாக சாலை வழியாக சுமார் 500 கிலோமீட்டர் நடை பயணம் செய்து நாமக்கல் மாவட்டத்திற்கு வர எண்ணிய லோகேஷ் பாலசுப்ரமணியம். வழியிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






