தமிழ்நாடு முழுவதும் 10,000க்கும் அதிகமான வார்டுகளில் திமுக போட்டி..!
சென்னை தவிர பிற மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியலை நாளை வெளியிட திட்டமிட்டுள்ளது திமுக. திமுக சென்னையில் 170 க்கும் அதிகமான வார்டுகளில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் தீவிரமடைந்து வரும் நிலையில் இட பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் இறுதி செய்வது குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் பொதுச் செயலாளர் துரைமுருகன் ஆலோசனை நடத்தினர்.
ஏற்கனவே கட்சியின் தலைவர் இடப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் திமுகவினர் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சென்னையில் 10 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் 170 க்கும் அதிகமான இடங்களில் திமுக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






