இயக்குநர் பாக்யராஜின் சர்ச்சை பேச்சு: ஆந்திர மகளிர் ஆணையம் கண்டனம்
பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசியதாக இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு மகளிர் ஆணையத்திற்கு ஆந்திர பெண்கள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
1979 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள பாக்கியராஜ் 50க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
திருமணத்தை மீறிய காதல் குறித்தும் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் தனது பல திரைப்படங்களில் பேசியுள்ள பாக்கியராஜ் தற்போது திருமணத்தை மீறிய ஆண்களின் காதலை நியாயப்படுத்தி பேசியிருப்பதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
அனுபவ இயக்குனர் பாக்யராஜின் இது போன்ற கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் விவாதம் ஆகி வரும் நிலையில் அவரது பேச்சுக்கு ஆந்திர மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு மகளிர் ஆணையத்திற்கு பரிந்துரைத்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




