பாஜக சட்டமன்ற அலுவலகத் திறப்பு விழாவில் வாக்குவாதம்..!
சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற பாஜக சட்டமன்ற அலுவலகத் திறப்பு விழாவில் கட்சி நிர்வாகிகள் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தேர்தல் பணிக் குழுவில் புறக்கணிக்கப்படுவதாக கூறி ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் செய்தியாளர்கள் கேமராக்களை உடனடியாக அமைக்க வேண்டும் என நிர்வாகிகள் மிரட்டியதாக கூறப்படுகிறது.
திறப்பு விழாவில் கலந்து கொண்ட பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் நிர்வாகிகளை சமாதானப்படுத்தி உள்ளனர்.






