--- --:--:-- --

தமிழகத்தில் இன்று 2608 பேருக்கு கொரோனா உறுதி..! உயிரிழந்தோர் 38 பேர்!!சென்னையில் மொத்த பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது!!

1

மிழகத்தில் இன்று ஒரே நாளில் 2608 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒரே நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது.

 

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாகவே தினசரி சொற்று பாதிப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கு கீழாக பதிவாகி வருகிறது. உயிரிழப்பும் குறைந்த அளவிலேயே பதிவாகி வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

 

தமிழகத்தில் இன்று 2608 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7.22 லட்சமாக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 91 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 3924 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் இன்னும் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 23 ஆயிரத்து 532 பேர் மட்டுமே.

 

சென்னையிலும் தொடர்ந்து 12-வது நாளாக தினசரி தொற்று பாதிப்பு ஆயிரத்திற்கு கீழாக படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று 723 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மட்டும் இதுவரையிலும் மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டி, 1.99 லட்சமாக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் 77 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 98.85 லட்சம் பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon