திரைப்பட சென்சார் சான்றிதழ்களில் மாற்றம்..!
மத்திய தணிக்கை வாரியம் சில மாற்றங்களை கொண்டு வர உள்ளது. அதன்படி, U7+, UA/13+, A/16+ சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. திரைப்பட சான்றிதழ்களில் கொடுக்கப்பட்ட வயதைச் சார்ந்தவர்கள் அந்தந்த படங்களை பார்க்கலாம்.
தற்போது படங்களுக்கு U (அனைவரும் பார்க்கலாம்), A (18 வயது நிரம்பியவர்கள்), U/A (பெற்றோர் அனுமதியுடன் 18 வயதிற்கு குறைவானவர்களும் பார்க்கலாம்) என்ற 3 வகைகளில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.






