--- --:--:-- --

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்பு..!

13

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டின் நீலகிரி, கோவை மாவட்டங்களில் மலைப்பகுதிகள் வட கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இன்று முதல் ஐந்து நாட்களுக்கு தென்மேற்கு வடக்கு மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon