--- --:--:-- --

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பருவத் தேர்வுகள் அறிவிப்பு..!

1

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு முதல் பருவத்தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் நவம்பர் 30ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு டிசம்பர் 1ஆம் தேதியும் தொடங்க உள்ளது.

 

கொரொனா பரவலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பருவ தேர்வு முறையை சிபிஎஸ்இ நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் அட்ஜெக்டிவ் முறையில் தேர்வு நடைபெறும் எனவும் ஒவ்வொரு தேர்வும் 90 நிமிடங்கள் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

 

11.30 மணிக்கு தேர்வைதொடங்குவோம் என கூறப்பட்டுள்ளது. தேர்வுக்கு பிறகு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பருவ தேர்வு மார்,ச் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon