நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் பாஜக..!
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார்.
பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழ்நாடு வருவதை ஒட்டி நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தீவிரம்ப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை மாநில தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார்.
அதன்படி சேலம் தொகுதிக்கு கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கமும் ஈரோடு தகுதிக்கு தேசிய மகளிர் அணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பாரதி சீனிவாசகம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதைப்போல் பொள்ளாச்சி தொகுதியில் பாஜக பொறுப்பாளராக ஏ பி முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். சிதம்பரம் தொகுதிக்கு எஸ்டி சூர்யாவை நியமித்து அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தென்காசி தொகுதியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நியமனம் செய்யப்பட்ட 39 பொறுப்பாளர்களுக்கும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதியில் உடனடியாக தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும் என்று அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.






