--- --:--:-- --

இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்..!

2

க்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் இன்று தொடங்க உள்ள நிலையில் உடல் வெப்பம் அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் மீது சூரியன் அதிக வெப்பத்தைக் கொடுக்கும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடக்கம் 26 ஆம் தேதி முடிவடைகிறது.

 

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் 2 டிகிரி முதல் 35 செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதே நேரத்தில் அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. அதற்கு அடுத்தபடியாக திருத்தணி மற்றும் திருச்சியில் 104 டிகிரி பாரன்ஹீட், 103 டிகிரியும், ஈரோடு, கரூர், பரமத்தி, தஞ்சை மற்றும் மதுரையில் 102 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

 

Right Menu Icon