வயிற்று வலியால் துடித்த 13 வயது சிறுமி..பரிசோதனையில் கர்ப்பமாக இருந்ததால் அதிர்ச்சி..!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 62 வயதான நாகராஜன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வயிற்று வலிக்கு ஆளான சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பொழுது கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
போலீசார் விசாரணையில் தனியார் பள்ளி பேருந்தில் உதவியாளராக பணியாற்றி வரும் நாகராஜ் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.






